2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

‘வேட்டை மன்னன்’ சிம்பு

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 23 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஏட்டிக்கு போட்டியாக பேசுவதிலும் அடுக்குமொழி பேசுவதிலும் தன் தந்தைக்கு நிகரானவர் சிம்பு என்பதை திரையுலகில் யாவரும் அறிவர். அதற்கமைய தன் ஏட்டிக்கு போட்டி தனத்தை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறார் சிம்பு.

லிங்குசாமியின் புதிய படமாக அண்மையில் அறிவிக்கப்பட்டிருக்கும் ‘வேட்டை’ படத்தில் சிம்புதான் நடிப்பதாக இருந்தது. ஆனால் கருத்து முரண்பாடு காரணமாக அப்படத்திலிருந்து சிம்பு விலக்கப்பட்டார். இதில் கடுப்பாகியிருந்த சிம்பு, தனது புதிய படத்தின் தலைப்பை ‘வேட்டை மன்னன்’ என்று அறிவித்திருக்கிறார். 'வேட்டை'க்கு போட்டியாக 'வேட்டை மன்னன்' தொடங்கியிருக்கும் சிம்பு கருத்துத் தெரிவிக்கையில்…

'வேட்டை மன்னன்' எனது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும். இது முழுக்க முழுக்க அக்ஷன் கதை. இதில் மூன்று கதாநாயகிகள். ஒருவரை ஹொலிவூட்டிலிருந்து அழைத்துவரவிருக்கிறோம். சண்டைக்காட்சிகளை இயக்குவதற்காக ஹொலிவூட் ஸ்டன்ட் மாஸ்டர்களை வரவழைக்கவிருக்கிறோம். இப்படத்தில் ‘மன்னன்’ இருப்பது ரஜனி ரசிகர்களுக்கும் பெரும் விருந்தாக அமையுமென நினைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

நிக் ஆர்ட் சக்கரவர்த்தியின் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தினை புதிய இயக்குநர் நெல்சல் இயக்குகிறார். சிம்புவின் நண்பர் யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். வேட்டை மன்னனின் படப்பிடிப்பு வெகுவிரைவில் ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--