2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

பிரபுதேவா மீது வழக்கு...

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 04 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நயன்தாராவுடன் திருமண பந்தத்தில் இணைந்துகொள்ளப் போவதாக பகிரங்க அறிவிப்பு விடுத்ததாகவும் இதனால் தான் மனமுடைந்துள்ளதாகவும் கூறி குடும்பநல நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்துள்ளார் பிரபுதேவாவின் மனைவி ரம்லத்.

ரம்லத் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது... 'நானும் பிரபுதேவாவும் ஹிந்து முறைப்படி 1995ஆம் ஆண்டு செப்டெம்பர் 8ஆம் திகதி திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு மூன்று பிள்ளைகளும் இருக்கிறார்கள். இதில் ஒரு மகன் புற்றுநோயினால் அண்மையில் இறந்துவிட்டார்.

என்னுடைய கணவர் பிரபுதேவாவில் 'வில்லு' திரைப்படத்தின் பின்னர் பல மாற்றங்களை நான் அவதானிக்கத் தொடங்கினேன். சரியாக எங்களை கவனிப்பதில்லை. பிள்ளைகளுடனும் சரியாக பழகுவதில்லை. இதனால் நாங்கள் உளமார பாதிப்படைந்துள்ளோம்.

இந்நிலையில்தான் 'வில்லு' படத்தில் நாயகியாக நடித்த நயன்தாராவுடன் தான் சேர்ந்து வாழ விரும்புவதாக என்னுடைய கணவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் நயன்தாரா என்னுடன் தொடர்புகொண்டு 10 கோடி பணமும் வைர நெக்ளஸும் தருவதாகவும் தனக்கு பிரபுதேவாவை விட்டுக்கொடுக்கும்படியும் என்னிடம் தெரிவித்தார். இதனை கருத்திற்கொண்டு பிரபுதேவா மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்...' என்று குறிப்பிட்டுள்ளார் ரம்லத்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .