2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

ஜெனிலியாவுக்கு 'பெரிசு'

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 07 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜெனிலியாவுக்கு பல்லு கொஞ்சம் பெரிசாக இருந்தாலும் அழகான சிரிப்பின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார் என இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

உத்தம புத்திரன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று புதன்கிழமை சென்னையில் நடைபெற்றபோது அங்கு உரையாற்றிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரே இவ்வாறு மேடையில் பேசியுள்ளார்.

ஏற்கனவே தெலுங்கில் 'ரெடி' என்னும் பெயரில் வெளியாகிய படத்தினை தமிழில் 'உத்தம புத்திரன்' என்னும் பெயரில் ரீமேக் செய்கிறார்கள். இத்திரைப்படத்தில் தனுஷுடன் ஜெனிலியா ஜோடி சேர்ந்து நடிக்கிறார். உத்தம புத்திரனை மித்ரன் ஜவகர் இயக்குகிறார்.

உத்தம புத்திரனின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றபோது நடிகை சிநேகா குத்துவிளக்கு ஏற்றி மங்கலகரமாக விழாவை ஆரம்பித்து வைத்தார். இவ்விழாவில் சிறப்பதிதியாக கலந்துகொண்டு பேசிய கே.எஸ்.ரவிக்குமார் ஜெனிலியாவை புகழ்ந்து தள்ளினார். விவேக் ஒருபடி மேலே சென்று 'ஜெனிலியாபோல் ஒருவரை நான் இதுவரை பார்த்ததே இல்லை..' என்று தனது பாணியில் குறிப்பிட்டார்.

'ஜெனிலியாவை பக்கத்துவீட்டு பொண்ணுமாதிரி என்று சொல்வார்கள். நானும் எனது பக்கத்து வீட்டில் தேடிப்பார்த்தேன். ஆனால் ஜெனிலியாபோல் யாரையும் இதுவரை என்னால் காணமுடியவில்லை...' என்று விவேக் பேசியபோது சிரிப்பொலியால் அரங்கமே அதிர்ந்தது.

அனைவரது புகழ்ச்சியிலும் நனைந்த ஜெனிலியா வெட்கத்தால் நாணி குறுகிப்போனார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .