2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

விஷாலுக்கு சிம்புவின் காதலி வேண்டாமாம்...

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 23 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


'பாண்டிய நாடு' திரைப்படத்தைத் தொடர்ந்து, தனது அடுத்த சொந்தத் தயாரிப்பிலும் தனக்கு ஜோடியாக லட்சுமி மேனனையே ஒப்பந்தம் செய்துள்ளார் விஷால்.

சிக்கல் இல்லாத நடிகை என்பதால் இவரே தொடரட்டும் என திரைப்படத்தின் இயக்குநரிடம் கூறிவிட்டாராம் விஷால்.

இந்தப் படத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் ஹன்சிகா மோத்வானி. ஆனால் சமீப காலமாக அவரது காதல் பிரச்சினை, அவரை வைத்து இயக்குபவர்களுக்கு சங்கடங்களை உண்டாக்கி வருவதாக பேச்சு கிளம்பியுள்ளது.

ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்துவிட்டு, சிம்புவுடன் பஞ்சாயத்து பண்ணிக்கொண்டிருப்பதைவிட, பாண்டிய நாடு படத்தில் நல்ல ஒத்துழைப்பு தந்த லட்சுமி மேனனே இந்தப் படத்தில் தொடரட்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் விஷால்.

இந்தப் படத்தை தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர் போன்ற படங்களை இயக்கிய திரு இயக்குகிறார். விஷாலே தயாரிக்கிறார். 'மஞ்சப்பை', 'சிப்பாய்', 'ஜிகர்தண்டா' உள்ளிட்ட 6 திரைப்படங்களில் இப்போது லட்சுமி மேனன் நடிக்கிறார்.

நஸ்ரியா பிரச்சினையால் அவர் நடிக்க வேண்டிய சில திரைப்படங்களுக்கும் இப்போது லட்சுமியிடம் கால்ஷீட் கேட்டுக்கொண்டிருக்கிறார்களாம்!
  Comments - 0

  • alexpandiyan Friday, 08 November 2013 07:07 AM

    லட்சுமிமேனன் காட்டில் நல்ல மழை....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--