2020 நவம்பர் 28, சனிக்கிழமை

இஸ்லாத்தை தழுவினார் ஜெய்...

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 17 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவைத் தொடர்ந்து, அவரது நண்பரும் நடிகருமான ஜெய்யும் இஸ்லாம் மதத்தைத் தழுவியுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளன.

கடந்த மார்ச் கடைசி வாரத்திலேயே அவர் இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்துக்கு மாறினார். பின்னர் இதை யுவனும் வெளிப்படையாகவே அறிவித்தார்.

இவரைத் தொடர்ந்து தற்போது நடிகர் ஜெய்யும் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சுப்பிரமணியபுரம், எங்கேயும் எப்போதும், ராஜா ராணி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் ஜெய்.

தற்போது இவரும் நஸ்ரியாவும் இணைந்து நடிக்கும் திருமணம் எனும் நிக்கா என்ற திரைப்படம் வெளியிடப்படவுள்ளது.

இத்திரைப்படத்தில் இவர் இஸ்லாம் மதத்தை சேர்ந்த பெண்ணை காதலிப்பவர் போன்று நடித்துள்ளார்  (நிஜ வாழ்க்கையிலும் ஒரு முஸ்லிம் நடிகையைக் காதலித்து தோற்றதாகக் கூறப்படுகிறது).

இத்திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே இஸ்லாம் மதத்தின் மீது தீவிர பற்று ஏற்பட்டுவிட்டதாம். இதையடுத்தே இவர் இஸ்லாம் மதத்துக்கு மாறியதாகக் கூறப்படுகிறது.


  Comments - 0

 • rohan Sunday, 20 April 2014 01:05 PM

  அடுத்த .............................

  Reply : 0       0

  Hazeem Sunday, 20 April 2014 04:09 PM

  Masha allah

  Reply : 0       0

  SHAMEEM Tuesday, 22 April 2014 11:29 AM

  உண்மையாயின் மகிழ்ச்சி...

  Reply : 0       0

  azeem Tuesday, 22 April 2014 06:03 PM

  அல்ஹம்துலில்லாஹ்...

  Reply : 0       0

  muhais Wednesday, 23 April 2014 11:11 AM

  அல்ஹம்துலில்லாஹ்

  Reply : 0       0

  sifan Monday, 19 May 2014 05:49 PM

  அப்போ....????

  Reply : 0       0

  Thanappan Thursday, 17 April 2014 11:44 AM

  மாஸா அல்லாஹ்

  Reply : 0       0

  shakilan Saturday, 19 April 2014 03:57 AM

  haijo pavam jey kku enathu aalntha anuthapankal

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--