2020 ஜூன் 03, புதன்கிழமை

5 வருடங்களுக்கு பின் ஆத்மியா ரீ-என்ட்ரி

Editorial   / 2019 ஒக்டோபர் 15 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ‛மனம் கொத்தி பறவை' படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் ஆத்மியா. பின் ‛போங்கடி நீங்களும் உங்க காதலும்' என்ற படத்தில் நடித்தார். இரண்டு படங்களுமே தோல்வி அடைந்ததால் ஆத்மியாவுக்கு வாய்ப்புகள் இல்லை. சில மலையாள படங்களில் நடித்தார்.

5 வருடங்களுக்கு பின் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். முழுக்க முழுக்க அமெரிக்காவில் தயாராகி உள்ள ‛காவியன்' என்ற படத்தில் ஷாம் ஜோடியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தை சாரதி என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். எதிர்வரும் 18ல் படம் வெளிவருகிறது.

இதுதவிர சுப்பிரமணியம் சிவா இயக்கும் ‛வெள்ளை யானை' படத்தில் நடித்து வருகிறார். இது விவசாயம் சம்பந்தப்பட்ட படம். இதில் தஞ்சாவூர் பெண்ணாக நடித்திருக்கிறார். இரு படங்களும் அடுத்தடுத்து வெளிவருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X