2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கொரோனாவால் ஜான்வியும் பாதிப்பு

Editorial   / 2020 ஜூன் 12 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவி ஆகியோரின் மூத்த மகளான ஜான்வி கபூர் தற்போது ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அவரது தந்தை தயாரிப்பில் அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படத்தின் மூலம் ஜான்வியின் தமிழில் பிரவேசிப்பார் என்று கூறப்படுகின்றது.

இந்த நிலையில் தனது குடும்பத்தை கொரோனா உலுக்கிவிட்டதாக ஜான்வி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தெரிவிக்கையில், "நாங்கள் இந்த ஊரடங்களை மகிழ்ச்சியாக தான் கழித்து வந்தோம். ஆனால் எங்கள் வீட்டில் வேலை செய்யும் ஊழியர்கள் மூன்று பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் நாங்கள் ஆடிப்போய்விட்டோம். கொரோனா எங்கள் குடும்பத்தை உலுக்கிவிட்டது.

நாங்கள் யாருமே வீட்டைவிட்டு ஒரு அடிக்கூட வெளியே எடுத்து வைக்கவில்லை. அப்படி இருக்கும் போது அவர்களுக்கு எப்படி கொரோனா தொற்று வந்தது என்பதே தெரியவில்லை.

இருந்தாலும் இந்த ஊரடங்கால் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க முடிந்தது. என்னை தந்தையையும், தங்கையையும் நான் தான் கவனித்து கொள்கிறேன்.

என் தந்தைக்கு வெந்நீர் வைத்து தருவது முதல் அனைத்து வேலைகளை நான் தான் செய்கிறேன்", என்றார் ஜான்வி.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .