2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பிரபல பொலிவூட் நடிகர் ரிஷி கபூர் காலமானார்

Editorial   / 2020 ஏப்ரல் 30 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்று உடல்நல குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரிஷி கபூர், இன்று மும்பை வைத்தியசாலையில் தனது 67ஆவது வயதில் காலமானார்.

கடந்த 2 ஆண்டுகளாக, ரிஷி கபூர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பல மாதங்களாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில், 2019ஆம் ஆண்டு, இந்தியாவுக்குத் திரும்பினார்.

பொலிவூட் திரையுலகின் முன்னணி நடிகரான ராஜ் கபூரின் இரண்டாவது மகனான ரிஷி கபூர், கடந்த 1973இல் வெளியான ´பாபி´ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

ஆனால், அதற்கு முன்னதாக ஸ்ரீ 420, மேரா நாம் ஜோக்கர் போன்ற திரைப்படங்களில் அவர் குழந்தை நட்சத்திரமாக தோன்றியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .