2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ராதிகா எனக்கு அம்மா கிடையாது... வரலட்சுமி சரத்குமார் அதிரடி!

Editorial   / 2020 மார்ச் 02 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை ராதிகா சரத்குமார் வெள்ளித்திரையில் கொடிகட்டிப் பறந்ததுடன் சின்னதிரையிலும் தனி முத்திரை பதித்தார். 

தற்போது முதன் முறையாக டிவி தொகுப்பாளர் அவதாரம் எடுத்து கலக்கி வருகிறார்.

ராதிகா மூன்றாவதாக சரத்குமாரை கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 

இவர்களுக்கு ராகுல் என்ற மகன் உள்ளார். அதேபோல் சரத்குமாரின் முன்னாள் மனைவி  சாயா. இவர்களுக்கு வரலட்சுமி சரத்குமார், பூஜா சரத்குமார் என்ற இரு மகள்கள் உள்ளனர். 

இந்த நிலையில் நடிகை வரலட்சுமி அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், நான் ராதிகா அவர்களை ஆண்ட்டி என்று தான் அழைப்பேன். 

அவர் எனக்கு அம்மா கிடையாது. என் அப்பாவின் இரண்டாவது மனைவி.

எனக்கு அம்மா என்றால்  ஒருவர் மட்டும் தான்.  எனக்கு மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைவர்க்கும் ஒரு தாய் தான். அதனால் ராதிகா எனக்கு ஆண்ட்டி தான். 

ஆனால் அவர் மீது என் அப்பா மீது வைத்துள்ள மரியாதை அளவுக்கு மரியாதை வைத்துள்ளேன்' என்று கூறியுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .