2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கந்தேகெட்டிய இளைஞனின் கொலை வழக்கு; பொலிஸார் அறுவருக்கு மரண தண்டனைத் தீர்ப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 05 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

கந்தேகெட்டிய பொலிஸ் நிலையத்தில் வைத்து, இளைஞரொருவரைத் தாக்கிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளிகளென நிரூபிக்கப்பட்ட ஆறு பொலிஸாருக்கு, பதுளை நீதவான் நீதிமன்ற நீதவான் ரொஹான் ஜயவர்தன, மரண தண்டனைத் தீர்ப்பளித்து, நேற்று (4) உத்தரவிட்டார்.  

கந்தேகெட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர், மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள், பொலிஸ் பாதுகாப்பு உதவியாளர், சிவில் பாதுகாப்பு உதவியாளர் ஆகிய அறுவருக்கே, இவ்வாறு மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 2014ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த தினமொன்றில், அக்குருகடுவ, மீகஹினிவுல என்ற பிரதேசத்தைச் சேர்ந்த பெரும்ஹேவா சுதன் மாலிங்க (வயது 18) என்ற இளைஞரை, குற்றம் ஒன்றுக்காக சந்தேகத்தின் பேரில் கந்ேதகெட்டிய பொலிஸார் கைதுசெய்தனர்.  

பொலிஸ் நிலையத்தில் வைத்து, மேற்படி இளைஞனுக்குக் கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதால், அவ்விளைஞன் உயிரிழந்தார்.  

இச்சம்பவத்தையடுத்து, இளைஞனின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில், மேற்படி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய ஆறு பேருக்கு எதிராக, பதுளை நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதுடன், அந்த வழக்கு விசாரணை, கடந்த நான்கு ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வந்தது.  

இந்நிலையிலேயே, இவ்வழக்குக்கான இறுதித் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டுள்ளது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .