2020 ஜூன் 03, புதன்கிழமை

கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்ட யுவதி காதலனுடன் கைது

Editorial   / 2018 ஒக்டோபர் 04 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த முதலாம் திகதி அதிகாலை அடையாளம் தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்ட, அம்பலாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது யுவதியும், அவரது காதலனும் விடுதியொன்றில் தங்கியிருந்த நிலையில் நேற்று மாலை அம்பலாந்தோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட குறித்த இருவரும் இன்றைய தினம் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய
ஏனைய சந்தேகநபர்களும் கைதுசெய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், துப்பாக்கியைப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் குறித்த இளைஞனுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X