2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

'தாய் - மகள் ஃபெஷன் ஷோ'

A.P.Mathan   / 2013 ஜூலை 05 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையில் வளர்ந்து வரும் ஆடை வடிவமைப்பாளர்கள் மூலம் வடிவமைத்த ஆடைகளால் தம்மை அலங்கரித்துக் கொண்ட 'தாய் - மகள் ஃபெஷன் ஷோ' (Mother Daughter Fahion Designer 2013) நிகழ்வானது அண்மையில் இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு நிலையத்தில் (SLECC) நடைபெற்றது. 
 
இலங்கையில் தாய் - மகள் ஆகியோருக்கிடையேயான பிணைப்பினை வலுப்படுத்துவதற்கான தமது அர்ப்பணிப்பினை வெளிப்படுத்தும் வகையில் Chocolaate சஞ்சிகையுடன் இணைந்து ஹேமாஸ் ஹோல்டிங் பிஎல்சி நிறுவனத்தின் முன்னணி சுகாதார நப்கின் வகையான ஃபெம்ஸ் வர்த்தகநாமமானது இந் நிகழ்ச்சிக்கு அனுசரணையை வழங்கியிருந்தது.
 
இந்நிகழ்வில் பங்கேற்பதற்கு 'தாய் மற்றும் மகள்' தொனிப்பொருளிற்கு அமைய நாடுபூராகவும் உள்ள வளர்ந்துவரும் ஆடை வடிவமைப்பாளர்களிடம் தத்தமது வடிவமைப்பின் மாதிரிகளை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இந் நிகழ்வில் பங்கேற்ற விண்ணப்பதாரர்களுள் மிகச்சில வடிவமைப்பாளர்களே அரையிறுதி போட்டிக்கு தெரிவாகியிருந்தனர். அரையிறுதிப் போட்டியின் நடுவர் குழுவில் கிஹான் எதிரிவீர, தமித் குரே, ரமோனா ஓஷினி, அமிலானி பெரேரா மற்றும் ஷிமல்கா பொடரகம ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு 15 இளம் வடிவமைப்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
 
கடந்த மே மாதம் 11ஆம் திகதி இறுதி போட்டியாளர்களினால் ஊயளரயட Casual wear, Sports wear மற்றும் Evening wear ஆகிய மூன்று பிரிவுகளில் வடிவமைக்கப்பட்ட தாய் மற்றும் மகள் ஆகியோரின் ஆடையலங்கார அணிவகுப்பு SLECC இல் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியின் மூலம் வளர்ந்து வரும் ஆடை வடிவமைப்பாளர்களின் திறமைகளை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்பினை வழங்கியது மாத்திரமன்றி, இம் மாபெரும் மேடையின் அனுபவத்தை உண்மையான தாய் மற்றும் மகள் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்தது. இந் நிகழ்வில் தாய், மகள் ஆகியோர் அழகாக தோற்றமளித்ததுடன், பார்வையாளர்களை வசீகரிக்கும் வகையிலும் அமைந்திருந்தது.
 
இறுதிச்சுற்று போட்டியின் நடுவர்களாக இலங்கையின் பிரபல படைப்பாளிகளான ஹேம லலிந்த ரணவக்க, சொனாலி தர்மவர்தன, அமில கருணாநாயக்க, ருச்சிற கருணாரத்ன, பாத்தியா ஜயகொடி மற்றும் ஸ்டெஃபனி சிறிவர்தன ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். 
 
இளம் ஆடை வடிவமைப்பாளர்களில் பெரும்பாலானோர் நாடுபூராகவும் உள்ள முன்னணி டிசைன் பாடசாலைகளை சேர்ந்தவர்களாக காணப்பட்டனர். இருப்பினும், சிறப்பாக தமது திறமையை வெளிப்படுத்திய கண்டியைச் பிரதேசத்தைச் சேர்ந்த மர்யம் மரிலா தாய் மகள் பேஷன் ஷோ டிசைனர் 2013 பட்டத்தினை வென்றெடுத்தார். மேலும் 3ஆம் மற்றும் 2ஆம் இடத்தினையும் முறையே தக்ஷிலா அபேரத்ன மற்றும் கிறிசானி ரத்னராஜா ஆகியோர் வென்றனர்.
 
ஃபெம்ஸ் வர்த்தகநாமத்தின் உற்பத்தி முகாமையாளரான ஷமாளி பெரேரா கருத்து தெரிவிக்கையில், 'சுயமரியாதை, பெண்களின் சுய மதிப்பை அதிகரித்தல் மற்றும் தாய், மகள் ஆகியோருக்கிடையேயான உன்னதமான பிணைப்பினை மேம்படுத்தவே நாம் விரும்புகிறோம். அவர்களின் உறவினை ஊக்குவிக்கும் இத்தகைய நிகழ்விற்கு அனுசரணை வழங்கியதையிட்டு பெருமையடைகிறோம்' என்றார். 
 
ஃபெம்ஸ் வர்த்தகநாமமானது பெண்களின் சௌகரியம் மற்றும் பாதுகாப்பு குறித்து அக்கறை செலுத்தி வருகின்றது. மேலும் பெண்ணிய சுகாதாரத் தன்மையை பேணி வர்த்தகநாமத்தின் மதிப்பினை வலியுறுத்தும் வகையிலான இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு ஆதரவினை வழங்கி வருகின்றோம் என மேலும் அவர் தெரிவித்தார்.
 
'இத் தாய் மகள் ஃபெஷன் டிசைனர் நிகழ்ச்சியானது தாய்மார்களுக்கு மரியாதை செலுத்துவதாகவும், வடிவமைப்பாளர்களினால் வடிவமைக்கப்பட்ட தாய் மற்றும் மகள் ஆகியோருக்கான டிசைன்கள் அனைத்தும் ஃபெம்ஸ் வர்த்தகநாமம் வழங்கும் அதே நம்பிக்கையை கட்டியெழுப்புவதாக அமைந்திருந்தது. ஃபெம்ஸ் வர்த்தகநாமத்தின் மூலம் 4ஆவது தாய் மற்றும் மகள் ஃபெஷன் டிசைன்னர் நிகழ்ச்சிக்கு பிரதான அனுசரணையை வழங்கியதையிட்டு பெருமையடைகிறோம்' என Chocolaate சஞ்சிகையின் ஆசிரியர் மிஷேல் குணசேகர தெரிவித்தார். 
 
'Chocolaate தாய் மற்றும் மகள் ஃபெஷன் டிசைனர்' நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கியதன் மூலம் இலங்கை பெண்களின் நம்பிக்கைக்குரிய தோழியான ஃபெம்ஸ் வர்த்தகநாமமானது அதன் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் சௌகரியம் தொடர்பான வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .