2020 ஜூன் 01, திங்கட்கிழமை

பிரபலமாகி வரும் முக்கோண நடனம்

Editorial   / 2019 மார்ச் 18 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐஸ் பக்கெட் சவால், #meetoo, கிகி நடனம் என்பவற்றைத் தொடர்ந்து,   உலகம் முழுவதும் தற்போது முக்கோண நடனம் (TRIANGLE DANCE) பிரபலமாகி வருகிறது.

சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஏதோ ஓர் விடயம் வைரலாகி விடும். அவ்வாறு வைரலாகிய விடயங்களில், 'ஐஸ் பக்கெட் சவால்'  தொடங்கி, 'கிகி நடனம்' வரை ஏராளமான விநோத நடனங்கள் இதில் அடக்கம்.

இந்நிலையில் தற்போது, முக்கோண  நடனம் என்ற சவால் தற்போது வைரலாகி வருகிறது.

அதாவது மூன்று பேர் சேர்ந்து, ஒருவரது தோளில் மற்றொருவர் கைகளை போட்டுக்கொண்டு இந்த நடனத்தை ஆட வேண்டும். யார் இதில் சிறப்பாக நடனமாடுகிறார் என்பது, இணைய உலகில் தீவிரமாகக் கவனிக்கப்படுகிறது.

மூன்று பேர் இணைந்து, ஒருவருடைய தோளை மற்றவர் பற்றிக்கொண்டு, சீராக குதிக்க வேண்டும். இதுதான் இந்த முக்கோண நடனம். இதுதான் தற்போது வைரல் பட்டியலில், முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X