2020 ஜூன் 04, வியாழக்கிழமை

மருத்துவரின் வீட்டில் 2000க்கும் அதிகமான கருக்கள் கண்டுபிடிப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் இலினோய் மாகாணத்தில் முன்னாள் கருக்கலைப்பு மருத்துவர் ஒருவரின் வீட்டில் 2000க்கும் மேற்பட்ட இறந்த கருக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

செப்டம்பர் 3ஆம் திகதி அவர் இறந்த பின்பு, மருத்துவர் அல்ரிச் க்லொஃபெர் குடும்பத்தினர் அவர் சொத்துகளைப் பிரிக்கும்போது இதை கண்டறிந்துள்ளனர்.

மொத்தம் 2,246 கருக்களை அந்த வீட்டில் இருந்து கண்டுபிடித்துள்ளனர்.

ஒரு பதிமூன்று வயது சிறுமிக்கு அதிகாரிகளிடம் கூறாமல் கருக்கலைப்பு செய்துவிட்டார் என அவர் மேல் அப்போது குற்றம் சுமத்தப்பட்டது.

அவர் கருக்கலைப்பு நடந்த போது அங்கு அதிகாரிகள் இருந்ததை உறுதிப்படுத்த தவறினார் என ஏபி கூறப்படுகிறது.

எலும்பு மற்றும் தசை நிபுணராக இருந்த அவர் தன் 43 வருடங்களில் கருகலைப்பு செய்யும்போது ஒரு நோயாளியைக்கூட இழந்ததில்லை என அவரது அறிக்கை தெரிவிக்கிறது.

"பெண்களே கருத்தரிக்கின்றனர். ஆண்கள் இல்லை. எனவே அவர்கள் தங்கள் வாழ்கைக்கு எது சிறந்தது என நினைக்கிறார்களோ அதை நாம் மதிக்க வேண்டும்.

நான் இங்கு யாரையும் அதிகாரம் செய்வதற்கு இல்லை யாரையும் மதிப்பிடுவதற்காகவும் இல்லை," என அவர் விசாரணையின்போது கூறியதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிக்கை கூறியுள்ளது.

இந்த கருக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை செய்து வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X