Editorial / 2019 ஏப்ரல் 28 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பரிசோதனை முயற்சியாக ஜப்பானின் Hayabusa2 எனும் விண்கலம் Ryugu விண்கல் மீது பிளாஸ்டிக் குண்டுத்தாக்குதல் ஒன்றை மேற்கொண்டிருந்தது. இந்த தாக்குதலானது கடந்த ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி இடம்பெற்றது.
இந்நிலையில் சில வாரங்கள் கழித்து தாக்குதலால் ஏற்பட்ட விளைவுகளைக் காண்பிக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
Japan Aerospace Exploration Agency (JAXA) நிறுவனத்தால் திட்டமிடப்பட்ட இந்த தாக்குதலின்போது குறித்த விண்கல்லின் மேற்பகுதியில் பள்ளம் ஒன்று உருவாகியுள்ளது.
இந்த பள்ளமானது 2 மீற்றர்கள் தொடக்கம் 3 மீற்றர்கள் வரை விட்டம் கொண்டதாக காணப்படுகின்றது.
இப்பள்ளத்தின் மேற்பரப்பு கற்பாறைகளினால் மீண்டும் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள Kobe பல்கலைக்கழக பேராசிரியரான Masahiko Arakawa தாம் மீண்டும் பள்ளத்தை உருவாக்குவதற்கு முயற்சி செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இவர் விண்கல்மீது குண்டுத் தாக்குதலை மேற்கொள்ளும் திட்டத்தில் இணைந்து பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
19 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
1 hours ago
4 hours ago