2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘முடிப்பேன்! செய்து முடிப்பேன்’

Editorial   / 2018 ஜனவரி 30 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எது சரியானது, எது தவறானது என்றும் அல்லது எந்தக் கருமத்தை முதல் செய்ய வேண்டும், எதைக் கைவிட வேண்டும்? என்றும் ஆராய்ந்து கொண்டே மனதில் சலனத்தை விதைப்பவர்கள் முடிவில் எதையுமே செய்யாமல் விட்டுவிடுவதுண்டு.  

பல திசைகளில் புலனைச் செலுத்தினால், எல்லாமே சரியாகவும் தோன்றும். அதே வினாடியில் எல்லாமே தவறு என்றும் மனம் பேதலிப்பதுண்டு. சந்தேகம் வாழ்க்கையில் ஏற்படுவது சகஜம்தான்.

ஆனால், சந்தேகமே வாழ்க்கையாகக் கொண்டால் முடிவை எப்போது காண்பது ஐயா?

விருப்பத்துடன் முயற்சி செய்வேன் என்று சங்கல்பம் எடுப்பவர்களுக்கு வீணான மனப்பிரம்மை தோன்றவே மாட்டாது. சலன புத்திக்காரர்கள் சஞ்சலத்துக்குள் அகப்பட்டுக் கொள்கின்றனர். முடிப்பேன்! செய்து முடிப்பேன் என உறுதிபூணுங்கள். 

வாழ்வியல் தரிசனம் 30/01/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .