2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உலகை எதிர்கொள்ள ‘பெண் குழந்தைகளை தயார்படுத்துவோம்’

Editorial   / 2019 ஜனவரி 12 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த உலகை, பெண் குழந்தைகளும் ஆள வேண்டும் என்பதே, பல பெற்றோரின் கனவாக அமைகிறது. உலகை எதிர்கொள்வதற்காக, சிறு வயதிலிருந்தே, பெண்கள் குழந்தைகளும் தயார்படுத்தப்படல் வேண்டும். ஒருவரில் தங்கியிருக்காது, தீர்மானிக்கும் திறன் இயல்பாகவே ஏற்படுத்திவிடல் வேண்டும். இதனை எத்தனை பெற்றோர் செய்கின்றனர். அல்லது எத்தனை பெற்றோர், ஒரு பெண் குழந்தையை ஆண் குழந்தைக்கு சமனாக வளர்க்கின்றனர்?   

இந்தச் சமூகமானது, பாலின சார்பு கொண்டதாகக் காணப்படுகின்றது என்பது, நாம் அறிந்ததே. இத்தகைய ஒரு சமூகத்தில், ஒரு பெண், சுயமரியாதையுடன் வாழ்வதற்கான பணியை முன்னெடுப்பது கடினமே. என்றாலும், இச்சமூகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், இந்த சமுதாயத்தில் சுய மரியாதையுடன் வாழவேண்டும் என்ற முக்கியமான பொறுப்பு, பெற்றோர்களிடத்திலேயே உண்டு. பெற்றோர்களாகிய உங்களது நடவடிக்கைகளும் வார்த்தைகளும், பெண் குழந்தைகளின் எதிர்காலத்தில், ஒரு வெற்றிப்பாதையை இட்டுச் செல்லவேண்டும்.   

 முன்மாதிரியாக இருங்கள்

பெண் பிள்ளைகளின் உடல் தொடர்பான அதிக கவனம் செலுத்துவதில், தாய்மாருக்கு அதிக பங்குண்டு. அவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருங்கள். அவர்களுக்கு முன்னால், உங்கள் உடல் தொடர்பாக அதிக கவனம் செலுத்துவதையோ அல்லது உங்கள் உடல் தொடர்பாக அதிகம் கேள்வியெழுப்புவதையோ தவிருங்கள். உங்கள் குழந்தை, உங்களைப் பார்த்தே விடயங்களைக் கற்றுக்கொள்வர்.   

நவநாகரிகத்தைப் பின்பற்ற விடுங்கள்

அவளுக்கு மனது அவளுக்கு என்ன சொல்கிறதோ, அதைப் பின்பற்றி, அவளுக்குள் இருக்கும் திறன்களை வளர்த்துக்கொள்வதற்கு வழிவிடுங்கள். விளையாட்டுத்துறையோ, நாடகக்கலையோ, இசையோ எதுவாக இருந்தாலும் புதிய செயற்பாடுகளை முயன்று பார்ப்பதற்கு வழிசெய்யுங்கள். புதிய விடயங்களை முயல்வதன் மூலம், அவளது தன்னம்பிக்கை வளர்ச்சியடையும்.   

தோற்றத்துக்கு முக்கியத்துவம் அளிக்காதீர்கள்

அவளது தார்மீகத்தை அதிகரிக்க, அவளைப் பாராட்டவேண்டும்; ஆனால், “நீ மிகவும் அழகாக இருக்கிறாய்” என்று பாராட்டுவதைக் குறையுங்கள். அவளிடமுள்ள நேர்மை, இரக்கம் போன்ற குணங்களைப் பாராட்டுங்கள். அதேபோன்று, உங்கள் உள் தோற்றத்திலும் நீங்கள் கவனமாக இருத்தல் அவசியம். அவள், எப்போதும் தாயைப் பார்த்தே பழக ஆரம்பிப்பாள்.   

அவளது முயற்சியைப் புகழுங்கள்

அவளுடைய இலக்கை அடைவதற்காக, அவள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் பாராட்டுங்கள். ஒரு விடயத்தில் அவள் தோல்வியடைந்துவிட்டாலும், ​அதை ஏற்றுக்கொண்டு, அவள் மீண்டும் முயன்று வெற்றியடைவதற்கான ஊக்கத்தை வழங்குங்கள்.   

மற்றைய பெண்கள் பற்றி குறைகூறாதீர்கள்

மற்றப் பெண்ணைப் பற்றி, அவளிடம் குறைகூறாதீர்கள்; உங்கள் வீட்டில், யாரும் அப்படிக் குறைகூறுவதற்குக் கூட இடமளிக்காதீர்கள். மற்றைய பெண்கள் பற்றிய கிசு கிசுகளை பேசுவதை நிறுத்திவிட்டு, ஒரு பெண், தன்னுடைய வாழ்க்கையில் முன்னேறுவதற்கு, எவ்வாறான கஷ்டங்களை அனுபவிக்கிறாள், ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பயணம் எவ்வளவு கடினமானது என, பெண்ணின் கடின உழைப்பைப் பாராட்டுங்கள்.   

அவளையும் பேச விடுங்கள்

இக்காலத்துக் குழந்தைகள், பல ஊடகங்களைப் பார்த்து, பல தகவல்களைப் பெற்றுக்கொள்கின்றனர். அவளுடன் சேர்ந்து தொலைக்காட்சி பார்த்து, சில முக்கியமான சம்பவங்கள் குறித்து, அவள் என்ன நினைக்கிறாள் என்பதை, சாதாரணமாகக் கலந்துரையாடுங்கள். அவளுடைய மனதில் உள்ளது என்ன என்பதை வெளிப்படுத்த விடுங்கள். அவள் எதை நம்புகிறாளோ, அதற்காகப் போராடுவதற்கு, அவளுக்கு ஊக்கமளியுங்கள்.   

நீங்கள் அவளை நேசிக்கின்றீர்கள் என்பதை அவள் அறியவேண்டும்   

நீங்கள், அவள் மீது அன்பு கொண்டுள்ளீர்கள் என்பதை, அவள் அறிந்திருக்கவேண்டியது கட்டாயமாகும். அவளை நம்புங்கள், இது, அவளது சுய நம்பிக்கையையே மேலும் அதிகமாகும்.   

விமர்சனங்களின் முக்கியத்துவம்

சரியானது மற்றும் தவறானவற்றுக்கு இடையேயான வேறுபாட்டைக் கருத்தில் கொள்ளும் விதமான விமர்சனங்களும் முக்கியமானதாகும். அவர்களது ஒவ்வொரு சாதனைகளையும் நீங்கள் பாராட்டுவதைப் போன்றே, அவர்கள் தவறு செய்யும் போது, அவற்றை திருத்தி, எது சரியானது என்பதையும் தவறானதைச் செய்தால் என்னவாகும் என்பதையும் விளங்கப்படுத்துங்கள். அவளுக்கு, நல்ல நடத்தைகளை உள்ளீர்ப்பது என்பது, மிகவும் முக்கியமானதாகும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .