2024 மே 09, வியாழக்கிழமை

கனிவு இல்லாவிடின், அது காதலே அல்ல!

Editorial   / 2017 ஓகஸ்ட் 07 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

“என் காதலர் ரொம்பவும் நல்லவர்; மென்மையானவர். அவரது பலம், ஆளுமை எனக்கு மிகவும் பிடிக்கும். அதேபோல, அவரின் பலவீனமும் என்னைச் சந்தோசப்படுத்தும். ஏனெனில், இந்தப் பலவீனம், குழந்தைத்தனமானது. இதில் களங்கம் இல்லை; இயல்பானது.”

ஒருவரை ஒருவர் நன்கு தெரிந்து, புரிந்து கொண்டால், காதல் வாழ்வில் மேடு, பள்ளம் என எதுவுமே இல்லை. ஒருவரை ஒருவர் தாங்கும்போது, சுமைகள் கூடச் சுகமானதுதான். கனிவு இல்லாவிடின், அது காதலே அல்ல!

சர்வாதிகாரிகளையும் காதல் விட்டு வைப்பதில்லை. எனக்கு, நீதான் வேண்டும் என்று அவர்களையே சொல்ல வைத்த கதைகள், பல உண்டு. இரும்பையும் பஞ்சாக்கும். அதே சமயம், அச்சம் கொண்டவர்களையும் வீரமாக்கும் சஞ்சீவி. இது ஒரு போதையும் அல்ல. காதல், வாழ்வைச் செழிக்க வைக்கும் புனித யாத்திரை.

அது சரி! இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் நான், இளம் பெண் அல்ல; எங்களுக்கு பேரன், பேத்திகள் உண்டு. காதலில் ஏது முதுமை? முன்னர் இருந்த காதலைவிட இப்போது பலமடங்கு.  

   வாழ்வியல் தரிசனம் 07/08/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X