2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘சீராக வாழ்ந்தால் அதுதான் சொர்க்கம்’

Editorial   / 2017 ஓகஸ்ட் 24 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொடர்ந்து அனுபவித்து வரும் களிப்பூட்டிய வாழ்க்கை தெவிட்டி, உண்மையைத் தேடி, சந்நியாசியானவர்கள் அநேகர். 

அதேசமயம், தங்கள் வாழ்க்கையில் அல்லல்பட்டு, நொந்து வாழ்க்கையை வெறுத்துத் துற​வை மேற்கொண்டவர்களும் ஏராளம்.  

வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்கள் எல்லாமே எமக்குச் சார்பானவையாக அமைந்து விடுவதில்லை. இது யதார்த்தமான உண்மை. இதைப் புரிந்துகொண்டால் எதையும் சமாளிக்கும் இயல்பு உருவாகலாம். மனதைப் பக்குவப்படுத்துவது எளிதுமல்ல; ஆனால் எம்மை ஆசுவாசப்படுத்தாது விட்டால் வாழ்க்கையை எங்கனம் எதிர்கொள்ள முடியும் ஐயா. 

 வாழ்க்கை கோரமானதோ, அல்லது காரமானதோ எனச் சதா எண்ணிக் கலவரப்பட்டால் நிலையான அமைதியை உருவாக்க முடியுமா? 

சீராக வாழ்ந்தால் அதுதான் சொர்க்கம். பெரிதாகக் கற்பனைசெய்து, உங்களை நீங்களே பயமுறுத்தல் வேண்டாம். 

பயணத்தின்போது, வாகனத்தின் கண்ணாடியூடாகப் பாருங்கள்! வரண்ட நிலங்கள், இயற்கை வனப்புகள் எதிர்த்திசையாக ஓடுவதுபோல் தோற்றம்காட்டும். ஆனால், வண்டி வளைந்து, வளைந்து ஓடி, தனது இடத்தை நாடும். பார்வைகளில் மயங்க வேண்டாம். 

   வாழ்வியல் தரிசனம் 24/08/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .