2020 ஓகஸ்ட் 14, வெள்ளிக்கிழமை

சந்திரனின் மேற்பரப்பில் குழிகள்; விண்ணாய்வு தகவல்கள் வெளியீடு

Editorial   / 2019 மே 20 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்திரனின் மேற்பரப்பில் குழிகள் ஏற்பட்டமைக்கான காரணத்தை சீனாவின் விண்ணாய்வு கருவி துலக்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் சந்திரனின் தூரமான பின்மேற்பரப்பிலுள்ள குழிகளை ஆய்வு செய்வதற்காக சேங் - ஏ 4 என்ற விண்ணாய்வு கருவி அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த கருவி மேற்கொண்ட ஆய்வுகளின் படி, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சந்திரனில் விழுந்த எரிகற்களின் கடுமையான தாக்கத்தால் இந்த குழிகள் உருவானதாக விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்.

இந்த எரிகற்களின் தாக்கம், சந்திரன் மையப் பகுதியில் இருந்து மூன்றாம் அடுக்கு பாறைபடிவங்களான மூடகம் வரையில் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விண்ணாய்வு கருவி சோதனை நடத்துகின்ற பரப்பானது, சந்திரனின் பூமிக்கு தெரியாத பின் மேற்பரப்பாகும்.

இந்த பரப்பு பூமிக்கு தெரிகின்ற சந்திரனின் பரப்பைக் காட்டிலும் கரடுமுரடாக அமைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பரப்பில் இலகுவாக தரையிறங்கிய முதலாவது விண்ணாய்வு கருவி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--