Editorial / 2019 ஓகஸ்ட் 18 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
டிக் டொக் செயலியால் இளைஞர்கள் பாதிக்கப்படுவதாகவும், பல உயிர் பலிகள் ஏற்படுவதாகவும் தொடர்ச்சியாக புகார்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், டிக் டொக்கில் பிரத்தியேக எக்கவுண்ட் ஒன்றை உருவாக்கியுள்ளது உத்தரகாண்ட் பொலிஸ்.
இந்த எக்கவுண்டில் இருந்து டிக் டொக்கில் பல வீடியோகளை வெளியிட்டு வருகிறது உத்தரகாண்ட் பொலிஸ். பெண்களிடம் யாராவது அத்து மீறினால் அவர்களை எப்படி வீழ்த்துவது, சுதந்திர தினத்தன்று பொலிஸாரின் அணிவகுப்பு ஆகியவற்றை அதில் பதிவிட்டு வருகின்றனர்.
டிக் டொக் விரும்பிகளும் அந்த வீடியோகளை பார்த்து லைக் செய்து, ஷேர் செய்தும் வருகின்றனர். இதுவரை அந்த வீடியோகளை ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய உத்தரகாண்ட் காவல் சட்டம் மற்றும் ஒழுங்கு துறையின் ஜெனரல் அஷோக் குமார் “டிக் டொக் செயலி மக்களை சென்றடைவதற்கான எளிமையான வழி. இதன் மூலம் சைபர் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, சமூக சார்ந்த பிரச்சினைகள் ஆகியவற்றை வீடியோவாக மக்களிடம் கொண்டு சேர்க்கலாம் என திட்டமிட்டுள்ளோம்” என கூறியிருக்கிறார்.
உத்தரகாண்ட் பொலிஸின் இந்த நேர்மறை சிந்தனையை பலரும் வரவேற்றுள்ளனர்.
8 minute ago
14 minute ago
29 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
14 minute ago
29 minute ago
47 minute ago