2020 ஓகஸ்ட் 14, வெள்ளிக்கிழமை

விண்வெளியில் போர் ஒத்திகை

Editorial   / 2019 ஜூன் 08 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

விண்வெளியில் போர் ஒத்திகையொன்றை நடத்துவதற்கு, இந்திய இராணுவம் தீர்மானித்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளன.

குறித்த போர் ஒத்திகையை, இந்த மாத இறுதியில் நடத்தவுள்ளதாக, இந்திய விண்வெளி பாதுகாப்பு மற்றும் ஆய்வு நிறுவனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விண்வெளிப் போரில் பயன்படுத்தப்படும் உபகரணங்களின் மாதிரிகள் பயன்படுத்தப்பட்டு மெய்நிகர் தொழில்நுட்பத்தை, இந்தச் செயற்பாடுகளில் பயன்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஒரு நாட்டின் செயற்கைக் கோள்களை ஏனைய நாடுகள் தாக்கி அழிப்பது விண்வெளிப் போராகும். அந்தவகையில் மிஷன் சக்தி என்ற பெயரில், செயற்கைக்கோளை எதிரிகள் அழிக்கும் முயற்சியை தடுக்கும் சோதனையை அண்மையில் இந்தியா நடத்தி வெற்றியடைந்திருந்தது.

குறித்த செயற்பாட்டினால் போர்த்திறன் படைத்த நாடுகள் பட்டியலில் 4 ஆவது இடத்தினை இந்தியா பிடித்துள்ள நிலையில் மீண்டுமொரு சாதனையை நிகழ்த்துவதற்கு விண்வெளியில் போர் ஒத்திகையை நடத்த தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--