2021 மார்ச் 08, திங்கட்கிழமை

Perseverance Rover செவ்வாயில் தரையிறங்கிய காட்சிகள் வெளியீடு

Gavitha   / 2021 பெப்ரவரி 23 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

Perseverance Rover செவ்வாயில் தரையிறங்கிய காட்சிகளை நாசா வெளியிட்டுள்ளது.

தரையிறங்கும்போது, மேற்பரப்பிலுள்ள மணல் துகள்கள் விண்கலத்தின் விசையினால் வெளித்தள்ளப்படும் காட்சி தத்ரூபமாக பதிவாகியுள்ளது.

இந்தக் காட்சிகளைப் பார்வையிடும் ஒவ்வொருவரையும் தம்முடனான செவ்வாயின் பயணத்தில் இணைத்துள்ளதாக நாசாவின் செவ்வாய் பயணக் கட்டுப்பாட்டு நிலையத்தின் ஆய்வுகூட பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30 ஆம் திகதி செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட இந்த விண்கலம் கடந்த வௌ்ளிக்கிழமை அதிகாலை செய்யவாய்க் கிரகத்தில் தரையிறங்கியது.

அடுத்த 2 ஆண்டுகளுக்கு செவ்வாயிலுள்ள குன்றுகளில் லேசர் தொழில்நுட்பத்தின் மூலம் முன்பு உயிர் வாழ்ந்தமைக்கான சான்றுகள் தொடர்பிலான தகவல்களை சேகரிக்கவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .