2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இணையத் திருட்டில் $3 மில்லியன் களவாடப்பட்டது

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 10 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

9,000 வாடிக்கையாளர்களிடமிருந்து, 2.5 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்கள் கடந்த வாரயிறுதியில் களவாடப்பட்டுள்ளதாக, பிரித்தானிய சில்லறை நிறுவனமான‌ டெஸ்கோவின் வங்கிப் பிரிவு, நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (08), தெரிவித்துள்ளது. குறித்த சம்பவத்தை, மேற்குலக வங்கியொன்றில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது பாரிய ஹக் என இணைய வல்லுநர்கள் வர்ணித்துள்ளனர்.

எவ்வாறெனினும், மேற்கூறப்பட்ட இணையத் திருட்டைத் தொடர்ந்து, தமது சேவைகளை முழுமையாக ஆரம்பித்துள்ளதாக, டெஸ்கோ வங்கி தெரிவித்துள்ளது. மேற்படி இணையத்திருட்டினைத் தொடர்ந்து, இணைய வழி வங்கிச் சேவைகள், கடந்த திங்கட்கிழமை (07), நிறுத்தப்பட்டிருந்தன.

மோசடியால் பாதிக்கப்பட் அனைத்து வாடிக்கையாளர் கணக்குகளுக்கான பணத்தினை மீள்வைப்புச் செய்துள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவித்த, டெஸ்கோ வங்கியின் பிரதம நிறைவேற்றதிகாரி பென்னி ஹிக்கின்ஸ், இணையவழி வங்கிப்பரிவர்த்தனை இடைநிறுத்தத்தை விலக்கியுள்ளதாகவும் எனவே, தமது கணக்குகளை வழமைபோல் வாடிக்கையாளர்கள் பாவிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

டெஸ்கோவின் சில வருடங்கள் வருமானத்தின் நான்கிலொரு பங்கினை ஈட்டுகின்ற டெஸ்கோ வங்கி, எந்தவொரு வாடிக்கையாளரின் தரவும் திருட்டுப் போகவில்லை எனக் கூறியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .