2020 ஒக்டோபர் 19, திங்கட்கிழமை

மன்னார் தூய செபஸ்தியார் ஆலயத்தில் வைரவிழா

Kogilavani   / 2013 ஒக்டோபர் 28 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


தூய செபஸ்தியார் பேராலயத்தின் 60ஆம் ஆண்டு வைர விழா திருநாள் திருப்பலி நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை மன்னாரில் நடைபெற்றன.

இதன்போது, மன்னார் மெழுகுதிரி சந்தியில் இருந்து ஆரம்பமாகிய ஊர்வலம் தூய செபஸ்ரியார் பேராலயத்தைச்
சென்றடைந்தது.

புனித செபஸ்ரியார் பேராலயத்தை சென்றடைந்த பின் திருவிழா திருப்பலி ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையின் தலைமையில் கூட்டு திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது.

இத் திருவிழா திருப்பலியை செபஸ்ரியார் பேராலயத்தின் பங்குதந்தை வண.பெப்பி சோசை அடிகளார், மன்னார் குருமுதல்வர் வண.விக்டர் சோசை அடிகளார், வண.சத்தியராஜ் அடிகளார், வண.தமிழ்நேசன் அடிகளார், வண. இராயப்பு அடிகளார், வண.யேசுராஜ் சில்வா அடிகளார் ஆகியோர் இணைந்து கூட்டுத் திருப்பலியாக ஒப்பு கொடுத்தனர்.

ஆயர் வண. இராயப்பு ஜோசப் இறை சொற் பொழிவுகளை நிகழ்த்தினார்.

இறுதியாக தூய செபஸ்ரியாரின் திருச்சொருப ஆசிர்வாதம் வண.ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையினால் வழங்கப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X