2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

பன்றித் தலைச்சி அம்மன் ஆலய பொங்கல் விழா

Kogilavani   / 2014 மார்ச் 24 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


நா.நவரத்தினராசா


வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் திங்கட்கிழமை (24) இரண்டாவது பங்குனித்திங்கள் பொங்கல் சிறப்பாக நடைபெற்றது.

குறித்த பொங்கல் நிகழ்விற்கு யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் அடியவர்கள் வருகை தந்ததுடன், திங்கட்கிழமை (24) காலை முதல் ஆயிரக்கணக்கான அடியவர்கள் அம்பாளுக்கு பொங்கி படைக்கும் நிகழ்வில் ஈடுபட்டனர்.

பங்குனித்திருவிழா நாளில் மட்டுவில் வெள்ளைக் கத்தரிக்காய் பெரும் மவுசு காணப்படும். அந்தவகையில் இன்றைய தினம் ஆலயச் சூழலில் ஒரு கிலோ வெள்ளைக் கத்தரிக்காய் 60 ரூபா விலையில் விற்பனை செய்யப்பட்டமையும், அதனை அடியவர்கள் ஆவலுடன் வாங்கிச் சென்றமையும் காணக்கூடியதாகவிருந்தது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .