Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 நவம்பர் 23 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாருக்குத்தான் ஆசையிருக்காது, ஆனால் வயதானவர்களுக்கு வரும் ஆசை வித்தியாசமானது.
சரி கதைக்கு வருவோம்…
எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்தப்படவிருக்கின்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப்பரீட்சைக்கு பலரும் தங்களை தயார் படுத்திகொண்டிருக்கின்றனர்.
தென்மாகாணத்தில் உள்ள மாணவியொருவரும் அவ்வாறுதான் தயாராகிக் கொண்டிருக்கின்றார்.
அவருடைய தந்தை, வங்கியொன்றில் கடமையாற்றுகின்றார். அரச வைத்தியசாலையில் தாய் கடமையாற்றுகின்றார்.
நகரத்துக்கு அண்மையிலிருக்கும் வீட்டிலேயே அவர்கள் வாழ்கின்றனர். அவர்களுடன், ஆச்சி அம்மாவும் (தந்தையின் தாய்) வாழ்கின்றார்.
பாடசாலைகள் ஆரம்பிக்கப்படாமையால், கல்வி நடவடிக்கைகள் யாவும் ஒன்லைனில் கற்பிக்கப்படுகின்றது.
தாயும் தந்தையும் காரில், தடமைகளுக்குச் சென்றுவிட்டனர். செல்வதற்கு முன்னரே, ஆச்சியை நன்றாக கவனித்துக்கொள்ளுமாறு தன்னுடைய பிள்ளையிடம் தந்தை தெரிவித்துள்ளார். ஆச்சியை பார்த்துகொள்ளுமாறு அம்மாவும் தெரிவித்துள்ளார்.
அன்றையதினம் காலை 10 மணியிருக்கும், மாணவிக்கு ஒன்லைனில் பாடம் ஆரம்பமானது.
ஆச்சிக்கு அருகில் சென்ற பேத்தி, சாப்பாட்டு அறையின் மேசையின் மீது சாப்பாடு இருக்கிறது. வாழைப்பழமும் இருக்கிறது. சுடுத்தண்ணீர் போத்தலில் சுடுநீடும் இருக்கிறது. கேக்கும் உள்ளது.
கேக்கை சாப்பிட்டு, வாழைப்பழத்தையும் சாப்பிட்டு தேனீரை குடித்துவிட்டு இருங்கள் நான் வருகின்றேன் என கூறிய பேத்தி, நான் “ஒன்லைன்க்கு” போகின்றேன். ஒன்றரை மணிநேரம் எடுக்கும் என்றும் சொல்லிவிட்டாள்
தன்னை தனியாக விட்டுவிட்டு பேத்தி போகிறாள் என்று என்னிய ஆச்சி, பேத்தியின் கைகளை பிடித்துக்கொண்ட ஆச்சி, வீட்டுக்குள்ளே இருந்து எனக்கும் வேணாமென்று போய்விட்டது. பக்கத்து வீட்டுக்கும் சென்றதில்லை. கிராமத்தினால் அப்படி இல்லை.
ஆகையால், “ஒன்லைன்க்கு என்னையும் கூட்டிக்கொண்டு போகவும்” எனக் கேட்டுக்கொண்டார்.
“ஒன்லைன்” ஓர் இடமில்லை ஆச்சி, போனில் படித்துகொடுப்பார்கள். அதுதான் “ஒன்லைனுக்கு போறேன்” என பேத்தி கூறிவிட்டார்.
அப்படியா, நான் நினைத்தேன் “ஒன்லைன்” ஓர் இடம் என்று என, ஆச்சி தெரிவித்துவிட்டார், பேத்தியும் கெக்கென சிரித்துவிட்டாள். (படம் இணையம்)
56 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
7 hours ago