2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஜனவரி 22

Super User   / 2011 ஜனவரி 22 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 


1849: இந்தியாவில் 9 மாதங்களாக நீடித்த இரண்டாவது ஆங்கில - சீக்கிய யுத்தம் முடிவுக்கு வந்தது.

1901: தனது தாயார் விக்டோரியா ராணியார் இறந்ததையடுத்து 7ஆம் எட்வர்ட் பிரித்தானிய மன்னரானார்.

1915: மெக்ஸிகோ ரயில் விபத்தில் 600 இற்கும் அதிகமானோர் பலி.

1917: முதலாம் உலக யுத்தத்தின்போது நடுநிலை வகித்துக்கொண்டிருந்த அமெரிக்காவின் ஜனாதிபதி வுட்ரோ வில்ஸன், ஐரோப்பாவில் 'வெற்றி தோல்வியில்லாத சமாதானத்தை' வலியுறுத்தினார்.

1927: உலகில் வானொலியில் முதல் தடவையாக நேரடி வர்ணனை செய்யப்பட்ட கால்பந்தாட்டப் போட்டி  இங்கிலாந்தின் ஆர்செனல் மற்றும் ஷீபீல்ட் யுனைட்டெட் கழகங்களுக்கிடையில் நடைபெற்றது.

1946: சி.ஐ.ஏ.வுக்கு முன்னோடியான விளங்கிய மத்திய புலனாய்வுக் குழு (சி.ஐ.ஜி.) ஸ்தாபிக்கப்பட்டது.

1969: சோவியத் யூனியன் தலைவர் பிரஸ்னேவை சுட்டுக் கொலை செய்ய துப்பாக்கிதாரியொருவர் முயன்றார்.

1970: போயிங் 747 விமானம் தனது முதலாவது வர்த்தக சேவையை அமெரிக்காவில் ஆரம்பித்தது.

1973: நைஜீரியாவில் போயிங் 707 விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 176 பேர் பலி.

1984: அப்பிள் மெகின்டொஷ் கணினி இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

1991: வளைகுடா யுத்தத்தின்போது இஸ்ரேல் மீது ஈராக் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. 96 பொதுமக்கள் காயமடைந்தனர்.

2006: பொலிவியாவில் ஈவோ மொராயல்ஸ் ஜனாதிபதியானார். அந்நாட்டின் ஜனாதிபதியாக முதல் பழங்குடி இனத்தவர் மொராயல்ஸ் ஆவார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .