2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று : ஒக்டோபர் 22

Editorial   / 2018 ஒக்டோபர் 22 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1927 : நிக்கோலா தெஸ்லா ஒரு முனை மின்சாரம் உட்பட 6 புதிய கண்டுபிடிப்புகளை அறிவித்தார்.

1941 : இரண்டாம் உலகப் போர் - பிரெஞ்சு எதிர்ப்புக் குழுவின் உறுப்பினர் கை மோக்கே மற்றும் 29 பணயக்கைதிகள் நாட்சி ஜேர்மனிப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1943 : இரண்டாம் உலகப் போர் - ​ஜேர்மனி மீது பிரித்தானிய அரச வான்படையினரின் இரண்டாவது நெருப்புப்புயல் தாக்குதலின் போது, காசெல் நகரில் 10,000 பேர் கொல்லப்பட்டனர். 150,000 பேர் வீடுகளை இழந்தனர்.

1947 : காஷ்மீர் பிரச்சினை தொடங்கியது.

1957 : வியட்நாம் போர் - ஐக்கிய அமெரிக்காவின் முதல் போர்ச் சாவு இடம்பெற்றது.

1962 : கியூபா ஏவுகணை நெருக்கடி -  கியூபாவில் சோவியத் அணுக்கரு ஆயுதங்கள் இருப்பதைத் தமது விமானப் படையினர் கண்டறித்துள்ளதாக அமெரிக்கத் தலைவர் ஜான் எஃப். கென்னடி அறிவித்தார்.

1964 : பல்கட்சிக் குழு கனடாவின் கொடிக்கான வடிவமைப்பை முடிவு செய்தது.

1964 : பிரெஞ்சு எழுத்தாளர் இழான் பவுல் சார்த்ரவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. எனினும் அவர் அதனைப் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.

1965 : இந்தியா-பாக்கிஸ்தான் இடையான இரண்டாம் காஷ்மீர் போர் முடிவுக்கு வந்தது.

1966 : சோவியத் ஒன்றியம் லூனா 12 விண்கலத்தை சந்திரனை நோக்கி ஏவியது.

1968 : நாசாவின் அப்பல்லோ 7 விண்கலம் பூமியை 163 தடவைகள் சுற்றிய பின்னர் அட்லாண்டிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது.

1970 : துங்கு அப்துல் ரகுமான் மலேசியாவின் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

1972 : வியட்நாம் போர் - ஓ சி மின் நகரில் என்றி கிசிஞ்சரும் தென் வியட்நாமியத் தலைவர் நியூவென் வான் தீயுவும் போர் நிறுத்தம் தொடர்பாக சந்தித்து உரையாடினர்.

1975 : சோவியத்தின் ஆளில்லா விண்கலம் வெனேரா 9 வெள்ளிக் கோள் மீது தரையிறங்கியது.

1978 : இரண்டாம் அருள் சின்னப்பர் திருத்தந்தையாக பதவியேற்றார்.

1987 : ஈழப்போர் - யாழ்ப்பாணம் அராலித் துறையில் இந்திய அமைதிப் படையின் உலங்கு வானூர்தி தாக்கியதில் பல பயணிகள் கொல்லப்பட்டனர்.

1999 : இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் பிரான்சில் பணியாற்றிய மோரிஸ் பேப்போன் என்ற இராணுவ அதிகாரிக்கு மானுடத்துக்கு எதிரான குற்றங்களுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது..

2001 :பிஎஸ்எல்வி சி-மூன்று விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

2007 : எல்லாளன் நடவடிக்கை - இலங்கையின் அநுராதபுரம் இலங்கை வான்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் நடத்திய தாக்குதலில் கரும்புலிகள் 20 பேரும், இலங்கை படையினர் 14 பேரும் கொல்லப்பட்டு பல வானூர்திகள் அழிக்கப்பட்டன.

2008 : இந்தியா சந்திரனை நோக்கிய சந்திரயான்-1 என்ற முதலாவது ஆளில்லா விண்கலத்தை ஏவியது.

2013 : ஆஸ்திரேலியத் தலைநகர ஆட்புலம் ஒருபால் திருமணத்தை அங்கிகரித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .