2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 31

Editorial   / 2017 ஒக்டோபர் 31 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1864 – நெவாடா ஐக்கிய அமெரிக்காவின் 36வது மாநிலமாக இணைந்தது.

1876 – இந்தியாவின் கிழக்குக் கரையில் சூறாவளியால் 200,000 பேர்உயிரிழந்தனர்.

1913 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது நெடுஞ்சாலை லிங்கன் நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.
1924 – உலக சேமிப்பு நாள் இத்தாலியின் மிலன் நகரில் சேமிப்பு வங்கிகளின் உலக அமைப்பினால் அறிவிக்கப்பட்டது.
1931 – தமிழின் முதல் பேசும் படம் காளிதாஸ் வெளியானது.
1941 – இரண்டாம் உலகப் போர்: ஐஸ்லாந்துக்கு அருகில் அமெரிக்கக் கப்பல் ஒன்றை ஜெர்மனியின் படகு தாக்கி மூழ்கடித்ததில் 100 அமெரிக்கக் கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
1954 – அல்ஜீரியாவில் பிரெஞ்சு ஆக்கிரமிப்புக்கெதிராக அல்ஜீரிய தேசிய விடுதலை முன்னணி போராட்டத்தை ஆரம்பித்தது.
1984 – இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இரண்டு சீக்கியப் பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பின்னர் புதுடில்லியில் இடம்பெற்ற கலவரத்தில் சுமார் 2000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
2000 – சிங்கப்பூர் போயிங் 747-400 விமானம் தாய்வானில் விபத்துக்குள்ளாகியதில் 83 பேர் உயிரிழந்தனர்.
2003 – 22 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் மலேசியப் பிரதமர் மகதிர் பின் முகமது தமது பதவியைத் துறந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .