2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வரலாற்றில் இன்று: நவம்பர் 25

S. Shivany   / 2020 நவம்பர் 25 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

1667 – காக்கேசியாப் பகுதியில் செமாக்கா என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 80,000 பேர் வரை உயிரிழந்தனர்.
 
1759 – பெய்ரூத், திமிஷ்கு நகரங்களை நிலநடுக்கம் தாக்கியதில் 30,000-40,000 பேர் உயிரிழந்தனர்.
 
1783 – அமெரிக்கப் புரட்சிப் போர்: 1783 பாரிசு உடன்படிக்கை: கடைசி பிரித்தானியப் படைகள் நியூயோர்க் நகரை விட்டுப் புறப்பட்டன.
 
1839 – இந்தியாவில் பலத்த சூறாவளி ஏற்பட்டது. ஆந்திராவின் கொரிங்கா நகரம் முற்றாக சேதமடைந்தது. 30,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
 
1905 – டென்மார்க் இளவரசன் கார்ல் நோர்வே வந்து சேர்ந்தான். இவன் பின்னர் 'ஏழாம் ஆக்கோன்' என்ற பெயரில் நோர்வேயின் மன்னனாக முடிசூடினான்.
 
1917 – முதலாம் உலகப் போர்: செருமனியப் படை மொசாம்பிக், தன்சானியா எல்லையில் போர்த்துக்கீச இராணுவத்தைத் தோற்கடித்தது.
 
1926 – ஐக்கிய அமெரிக்காவின் ஆர்கன்சஸ் மாநிலத்தில் இடம்பெற்ற சூறாவளியில் 76 பேர் உயிரிழந்து பலர் காயமுற்றனர்.
 
1941 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் 'பர்காம் என்ற கப்பல் செருமனியால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.
 
1944 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம், டெப்ட்ஃபோர்ட் நகரில் வூல்வேர்த் கடைத்தொகுதியில் ஜேர்மனிய விமானங்கள் ஏவுகணை வீசியதில் 160 பேர் கொல்லப்பட்டனர்.
 
1947 – நியூசிலாந்து வெஸ்ட்மின்ஸ்டர் சட்டத்தை ஏற்றுக் கொண்டு, ஐக்கிய இராச்சியத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டது.
 
1960 – டொமினிக்கன் குடியரசின் போராளிகள் மிராபல் சகோதரிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
 
1973 – கிரேக்கத் தலைவர் ஜோர்ஜ் பாப்படபவுலொசு இராணுவப் புரட்சியை அடுத்து பதவி இழந்தார்.
 
1975 – சூரினாம் நெதர்லாந்திடம் இருந்து விடுதலை பெற்றது.
 
1987 – பிலிப்பீன்சில் நீனா என்ற சூறாவளி தாக்கியதில் 1,036 பேர் உயிரிழந்தனர்.
 
1992 – செக்கோசிலோவாக்கியாவின் நாடாளுமன்றம் நாட்டை செக் குடியரசு, சிலவாக்கியா என இரண்டாக 1993 ஜனவரி 1 இலிருந்து பிரிக்க முடிவெடுத்தது.
 
1996 – அமெரிக்காவின் நடுப்பகுதியை பனிக்கட்டைச் சூறாவளி தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர்.
 
2000 – அசர்பைஜான் தலைநகர் பக்கூ நகரில் 7.0 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர்.
 
2006 – சீனாவின் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட நிலக்கரிச் சுரங்க விபத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர்.
 
2008 – இலங்கையின் வடக்குப் பகுதியை நிசா புயல் தாக்கியதில் 15 பேர் உயிரிழந்தனர். 90,000 பேர் இடம்பெயர்ந்தனர்.
 
2016 –கியூபாவின் 15வது அரசுத்தலைவர் பிடல் காஸ்ட்ரோ காலமானார்.
 
சிறப்பு நாள் 
பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் இன்றாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .