2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வரலாற்றில் இன்று: மே 23

Editorial   / 2018 மே 23 , மு.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

1939: அமெரிக்கக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான இசுக்குவாலசு, சோதனை ஓட்டத்தின் போது, நியூ ஹாம்சயர் கரையில் மூழ்கியதில், 24 பேர் உயிரிழந்தனர்.

1948: ஜெருசலேம் நகரில், அமெரிக்கத் தூதுவர் தோமஸ் வாசென் படுகொலை செய்யப்பட்டார்.

1949: மேற்கு ஜேர்மனி அமைக்கப்பட்டது.

1951: திபெத்தின் விடுதலைக்கான 17 அம்ச உடன்பாட்டில், திபெத்தியர்கள் கட்டாயமாகக் கைச்சாத்திட வைக்கப்பட்டார்கள்.

1958: ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்மதியான எக்ஸ்புளோரர் 1, தனது பூமியுடனான தொடர்பை இழந்தது.

1960: சிலியில் முதல் நாள் நிகழ்ந்த நிலநடுக்கத்தை அடுத்து ஏற்பட்ட ஆழிப்பேரலையால், 61 பேர் உயிரிழந்தனர்.

1998: வட அயர்லாந்தில் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில், பெல்பாஸ்ட் உடன்பாட்டை 75% பேர் ஏற்றுக்கொண்டனர்.

2006: அலாஸ்காவின் சுழல்வடிவ எரிமலையான கிளீவ்லாந்து வெடித்தது.

2008: அனைத்துலக நீதிமன்றம் "நடுப் பாறைகள்" என்ற குன்றை மலேசியாவுக்கும் வெண்பாறைத் தீவை சிங்கப்பூருக்கும் கையளித்துத் தீர்ப்புக் கூறியது. இதனை அடுத்து, இரு நாடுகளுக்கு இடையில் இருந்து வந்த 29 ஆண்டுகாலப் பிணக்கு தீர்க்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .