2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வரலாலற்றில் இன்று : ஜூன் 17

Editorial   / 2018 ஜூலை 17 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1911 : செங்கோட்டை வாஞ்சிநாதன், திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையை சுட்டுக் கொன்று தன்னையும் சுட்டு உயிரிழந்தார்.

1929 : நியூசிலாந்து மர்ச்சிசன் நகரில் 7.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 17 பேர் உயிரிழந்தனர்.

1933 : அமெரிக்காவின் கேன்சஸ் நகரில் கொள்ளைக்காரன் பிராங்க் நாஷ் என்பவனை விடுவிக்கும் பொருட்டு, கொள்ளைக்காரர் நடத்திய தாக்குதலில் நான்கு எஃப்.பி.ஐ பணியாளர்களும், பிராங்க் நாஷும் கொல்லப்பட்டனர்.

1939 : பிரான்சில் கடைசித் தடவையாக பகிரங்கமாகக் கழுத்து துண்டிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டது. இயூசன் வீடுமேன் என்பவர் இவ்வாறு கொல்லப்பட்டார்.

1940 : இரண்டாம் உலகப் போர் - பிரித்தானியாவின் லான்காஸ்ட்ரியா கப்பல் ஜேர்மானிய லூப்டுவாபே படையினரால் சென் நசேர் அருகில் தாக்கப்பட்டு, மூழ்கடிக்கப்பட்டதில் குறைந்தது 3,000 பேர் உயிரிழந்தனர்.

1940 : இரண்டாம் உலகப் போர் - பிரித்தானியப் படையினர் லிபியாவின் கப்பூசோ கோட்டையைத் தாக்கி, இத்தாலியப் படையினரிடம் இருந்து கைப்பற்றினர்.

1940 : எஸ்த்தோனியா, லாத்வியா, லிதுவேனியா ஆகிய மூன்று பால்ட்டிக் நாடுகளும் சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டினுள் வந்தன. 1991 இல் இவை விடுதலை பெற்றன.

1944 : ஐஸ்லாந்து டென்மார்க்கிடம் இருந்து விடுதலையை அறிவித்து குடியரசானது.

1948 : டக்லசு டிசி - 6 என்ற அமெரிக்க விமானம் பென்சில்வேனியா, கார்மேல் குன்றில் மோதியதில் அனைத்து 43 பயணிகளும் கொல்லப்பட்டனர்.

1953 : பனிப்போர் - பெர்லினில் கிழக்கு ஜேர்மனி அரசுக்கெதிராக, தொழிலாளர்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் சோவியத் படைகளினால் நசுக்கப்பட்டதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

1960 : நே பெர்சு அமெரிக்கப் பழங்குடியினர் 1863 உடன்படிக்கைப்படி, அவர்களது 7 மில்லியன் ஏக்கர் நிலம் குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டு, கொள்வனவு செய்யப்பட்டமைக்காக 4 மில்லியன் இழப்பீடு பெற்றனர்.

1963 : தெற்கு வியட்நாமில் பௌத்தர்கள் 2,000 பேர் வரை கலகம் செய்தனர். ஒருவர் கொல்லப்பட்டார்.

1967 : அணுகுண்டு சோதனை - சீனா தனது முதலாவது ஐதரசன் குண்டை வெற்றிகரமாகப் பரிசோதித்ததாக அறிவித்தது.

1985 : டிஸ்கவரி விண்ணோடத்தில் முதலாவது அராபிய விண்வெளிவீரர் (சுல்தான் பின் சல்மான் பின் அப்துலசீஸ் அல் சவுதி) விண்வெளிக்கு சென்றார்.

1991 : தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் - தென்னாப்பிரிக்கர்கள் அனைவரும் பிறப்பின் போது இனவாரியாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற சட்டத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் நிராகரித்தது.

1992 : 'கூட்டு ஆயுதக்குறைப்பு' ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், ரஷ்ய அரசுத்தலைவர் போரிஸ் யெல்ட்சின் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

2006 : மன்னார் பேசாலைப் பகுதியில் கடற்படையினருக்கும் புலிகளுக்கும் இடையிலான மோதலின் பின்னர் ஆறு பொதுமக்கள் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

2015 : சார்லசுட்டன் படுகொலை - தென் கரொலைனாவில் ஆப்பிரிக்க மெதடித்த தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

2017 : மத்திய போர்த்துகல் பகுதியில் காட்டுத்தீ பரவியதில், 64 பேர் உயிரிழந்தனர். 204 பேர் காயமடைந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .