2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

உயிர் இருக்கும் வரை மக்கள் பணி செய்வேன் - பிள்ளையான்

Princiya Dixci   / 2020 நவம்பர் 24 , பி.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி, எம்.எஸ்.எம்.நூர்தீன்

மக்களோடு மக்களாக நின்று, என்னுடைய உயிர் இருக்கும் வரை மக்கள் பணி செய்வேன் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் ஐந்து வருடங்களாக சிறையிலிருந்த அவர், பிணையில் இன்று (24) விடுதலை செய்யப்பட்டனர்.

நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேறிய பின்னர், தான் பிணையில் வந்தமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “என்னுடைய வழக்கு, திட்டமிட்ட ஒரு பழிவாங்கல். அதை இன்றுதான் நீதிமன்றம் உணர்ந்திருக்கின்றது. ஏற்ககெனவே நாங்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் போல மக்களோடு மக்களாக நின்று, என்னுடைய உயிர் இருக்கும்வரை மக்கள் பணி செய்வேன். என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு மாத்திரமன்றி, நான் வெளியில்வர வேண்டுமென பிரார்த்தனை செய்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .