Editorial / 2020 ஜூலை 30 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானியரிடம் இருந்து அதிகாரத்தை பெற்று நாட்டை கட்டியெழுப்ப டி.எஸ்.சேனாநாயக்கவால் உருவாக்கப்பட்ட ஒரே ஒரு கட்சி்யான ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாக்கவேண்டும் என, ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், “நான்கு - ஐந்து குழுக்கள் உள்ளன. அதில் முதலாவது குழுவினர் தொடர்பான பெறபேறுகளே இப்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி பலர் நீக்கப்பட்டுள்ளனர் .
இரண்டாவது குழுவினர் தொடர்பில் வெள்ளிக்கிழமை நடவடிக்கை எடுக்கப்படும். எங்களுக்கு சவால் விடுத்தனர். நாங்களா நீதிமன்றத்துக்கு சென்றோம்? அவர்களே சென்றனர்.
நாங்கள் இப்போது அதனை செயற்படுத்தியுள்ளோம். விலக்க முடியுமா? என்று கேட்டனர் அதனை செய்து காட்டியுள்ளோம். இப்போது என்ன சொல்கின்றனர்.
இங்கும் அங்கும் இருந்து வேடிக்கை காட்டுகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சி என்பது சத்திரம் அல்லவே. பிரித்தானியரிடம் இருந்து அதிகாரத்தை பெற்று நாட்டை கட்டியெழுப்ப டி.எஸ்.சேனாநாயக்கவால் உருவாக்கப்பட்ட ஒரே ஒரு கட்சி அதனை நாங்கள் பாதுகாக்க வேண்டும்” என்றார்.
50 minute ago
3 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
3 hours ago
8 hours ago