2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

காதலர் தினத்தை முன்னிட்டு மோசடி; பொலிஸார் எச்சரிக்கை

J.A. George   / 2021 பெப்ரவரி 12 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

காதலர் தினத்தை முன்னிட்டு மக்களை ஏமாற்றும் வகையில் பல்வேறு மோசடி நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர்  அலைபேசிகள் அல்லது சமூக ஊடக கணக்குகளுக்கு போலியான குறுஞ்செய்தி அனுப்பலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

“உங்கள் காதலன் அல்லது காதலி பரிசு அனுப்பியுள்ளதாகவும், அதைப் பெற பணத்தை வைப்பிலிட வேண்டும்” என்று மோசடியாளர்கள் கூறலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, இதுபோன்ற செயல்களுக்கு இரையாக வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .