R.Maheshwary / 2020 ஒக்டோபர் 13 , பி.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மற்றும் தெரிவு செய்யப்பட்ட நகரங்களில் பல்மாடி வாகனத் தரிப்பிடங்களை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பு மற்றும் ஏனைய நகரங்களில் ஏற்படும் வாகன நெரிசலைக் குறைப்பதற்காக, திறந்த போட்டி விலைமனு கோரல் செயன்முறைகளைப் பின்பற்றி, தெரிவு செய்யப்பட்ட முதலீட்டாளர்களைக் கொண்டு, இந்த வாகனத் தரிப்பிடங்களை அமைத்து பராமரிப்பதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, கொழும்பு, பத்தரமுல்ல, அநுராதபுரம், கண்டி, நாரஹேன்பிட்டி, புறக்கோட்டை ரெலிகொம் , கொழும்பு-07 ஒடஸ் விளையாட்டு கழக வாகனத் தரிப்பிடம், கொழும்பு-07 கிங்ஸி அவெனியு போன்ற இடங்களில் பல்மாடி வாகனத் தரிப்பிடம் மற்றும் இயந்திர வாகனத் தரிப்பிடங்கள் அமைக்கப்படவுள்ளன.
35 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
8 hours ago
9 hours ago