2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

பேஸ்புக் விருந்து; 19 பேருக்கு பிணை

Editorial   / 2020 ஓகஸ்ட் 10 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பேஸ்புக் சமூக வலைதளத்தினை பயன்படுத்தி களியாட்ட நிகழ்வினை ஏற்பாடு செய்த இளைஞனர், யுவதிகள் உள்ளிட்ட 19 பேர்  கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் ஹெரணை நீதவான் நீதிமன்றத்தால் இன்று (10) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களை பொதுச் சுகாதார பரிசோதகர்களின் கண்காணிப்பில் அவர்களது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, இதன்போது ஹெரோய்ன் போதைப்பொருள் 2 கிராம் 44 மில்லிகிராமுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவு பிறப்பிக்ககப்பட்டுள்ளது.

மில்லனிய, பெல்லன்குடாவ பகுதியில் உள்ள ஹோட்டிலில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

அவர்களில் 17 வயதுடைய இரண்டு மாத கர்ப்பிணி பெண்ணும் இருந்தாக பொலிஸார் நீதிமன்றில் கூறியுள்ளனர்.

இவர்கள், தெஹிவளை, பாணந்துறை, தொடங்கொட, கடுவலை, பொரலஸ்கமுவ மற்றும் ஹொரணை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--