2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

‘ரொஹா’தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

Editorial   / 2020 செப்டெம்பர் 24 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதாளக் குழு குற்றங்கள் மற்றும் ஹெரோயின் கடத்தல் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபரான ‘ரத்மலானை ரொஹா’ இன்று (24) சுட்டுக்கொல்லப்பட்டார்.

குறித்த நபர் 06 மனித கொலைகளுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் என, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2016ஆம் ஆண்டு குருநாகலில் பொலிஸ் பரிசோதகர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன், மற்றும் சில அதிகாரிகள் காயமடைந்த சம்பவத்தில் பிரதான  சந்தேக நபராக ‘ரத்மலானை ரொஹா’இனங்காணப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், பல்வேறு கொள்ளை சம்பவங்கள் தொடர்பிலும் குறித்த நபருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கொலை சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட குறித்த நபர் கடந்த ஜனவரி 16ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இந்தியாவுக்கு தப்பிச் செல்லும் முயற்சியில் கொச்சிக்கடை – கம்மல்தொட்ட பகுதியில் மறைந்திருந்த நிலையில், மேல் மாகாணத்தின் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, சந்தேக நபர் மற்றும் பொலிஸாருக்கு இடையில் பரஸ்பர துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் சந்தேக நபர் உயிரிழந்துள்ளதுடன், அவரிடமிருந்து T 56 ரக துப்பாக்கி மற்றும் ரிவோல்வரும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .