2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

வாக்குமூலம் வழங்கிய கரோலின் ஜூரி

J.A. George   / 2021 ஏப்ரல் 06 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாக்குமூலம் வழங்குவதற்காக திருமதி உலக அழகியான கரோலின் ஜூரி, கறுவாத்தோட்டம் காவல் நிலையத்தில் முன்னிலையாகியுள்ளார்.

திருமதி இலங்கை போட்டியில் முடிசூட்டப்பட்ட புஷ்பிகா டி சில்வா கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுப்பதற்காக கரோலின் ஜூரி அங்கு சென்றுள்ளார்.

இதேவேளை,  2021 ஆம் ஆண்டுக்கான 'திருமதி சிறிலங்கா' அழகிப் போட்டி நிகழ்ச்சியில் திருமதி உலக அழகியான கரோலின் ஜூரியின் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக திருமதி உலக அழகி போட்டியின் ஏற்பாட்டு குழு தெரிவித்துள்ளது.

முன்னதாக, நேற்று முன்தினம் (04) திருமதி இலங்கை அழகிப் போட்டியில் வெற்றியாளருக்கு வழங்கப்பட்ட மகுடம் சில நொடிகளில் பறிக்கப்பட்டுள்ள மற்றுமொருவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்த போட்டியில் திருமதி புஷ்பிகா டி சில்வா, வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு  மகுடம் சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

இதன்போது, போட்டியில் பங்குப்பற்றுபவர்கள் திருமணமானராக இருக்க வேண்டும் என்றும் விவாகரத்து பெற்றவராக இருக்க முடியாது என விதிமுறை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகுடம் சூட்டப்பட்ட திருமதி புஷ்பிகா டி சில்வா, ஏற்கெனவே திருமணமாகி, விவாகரத்து பெற்றவர் என்றும் இதனால் போட்டியில் வெற்றி பெற தகுதியற்றவர் என மீண்டும் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, திருமதி புஷ்பிகா டி சில்வாவுக்கு சூட்டப்பட்ட மகுடம், மேடையிலேயே மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டு, இரண்டாவது இடத்தை பெற்ற திருமதி ருவந்திக்கு சூட்டப்பட்டது.

இந்த நிலையில், புஸ்பிகா விவகாரத்தானவர் என்பதனை நிரூபிப்பதற்கு எவ்வித எழுத்து மூல ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும், இதனால் அவருக்கே இந்த பட்டத்தை இன்று(06) மீள வழங்க தீர்மானித்ததாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X