2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

வெளியானது ஜகமே தந்திரம் படத்தின் புஜ்ஜி பாடல் வீடியோ

J.A. George   / 2020 நவம்பர் 13 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஜகமே தந்திரம். 

தனுஷ் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இந்நிலையில் ஜகமே தந்திரம் படத்தின் புஜ்ஜி பாடல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அனிருத் மற்றும் சந்தோஷ் நாராயணன் பாடிய இந்த பாடல் வரிகளை விவேக் எழுதியுள்ளார். 

இந்த பாடலில் மைக்கேல் ஜாக்சன் பாணியில் கேப் அணிந்து நடனமாடியுள்ளார் தனுஷ். பாடலுக்கு பாடல் வித்தியாசம் காட்டும் சந்தோஷ் நாராயணன் இந்த பாடலிலும் அசத்தியுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .