அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவிலுள்ள ஹன்டிங்டன் கடற்கரையில்...

"> Tamilmirror Online || அலைச்சறுக்கலில் சாதனை

2020 மே 29, வெள்ளிக்கிழமை

அலைச்சறுக்கலில் சாதனை

Thipaan   / 2015 ஜூன் 21 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவிலுள்ள ஹன்டிங்டன் கடற்கரையில் அலைச்சறுக்கலில் ஈடுபட்ட குழு உலக சாதனை படைத்துள்ளது.

அலைச்சறுக்கு சம்பியன்கள் மற்றும் உள்ளூர் நட்சத்திரங்கள் அடங்கலாக 66பேர் கொண்ட குழுவே இச்சாதனையை படைத்துள்ளது.

இக்குழுவினர், 42 அடி நீளமான அலைச்சறுக்கு பலகையில் 12 செக்கன்களுக்கு அலைச்சறுக்கலில் ஈடுபட்டுள்ளனர்.

பத்து வருடங்களுக்கு முன்னர், அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் 47பேர் கொண்ட குழு 10 செக்கன்களுக்கு அலைச்சறுக்கலில் ஈடுபட்டமையே சாதனையாக இருந்தது.

இந்த சாதனை முயற்சியை பார்வையிடுவதற்கு சுமார் 5,000பேர் ஹன்டிங்டன் கடற்கரையில் குழுமியிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X