2024 மே 09, வியாழக்கிழமை

ஒரு கிலோ மீற்றர் தூரத்தை 1,207 மாணவர்கள் பின்நோக்கி நடந்து சாதனை

Kogilavani   / 2014 மார்ச் 03 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு கிலோ மீற்றர் தூரத்தை 1,207 மாணவர்கள் பின்நோக்கி நடந்து புதிய சாதனை ஒன்றை  நிலைநாட்டியுள்ளனர்.

இச்சாதனை இந்தியாவில் சத்ய சாய் பாடசாலை சதுக்கத்தில் இந்தூர் மாணவர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளது.

சீனாவின் சங்காய் மாகாணத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஜீன் 10 ஆம் திகதி 1039 பேர் இணைந்;து நிகழ்த்தியிருந்த சாதனையை தற்போதைய சாதனை முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரஸ்டிஜ் மேலாண்மை, ஆய்வு, தேசிய மற்றும் தொழில் முனைவோர் வலையமைப்பினால் நடத்தப்பட்ட தொழில் முனைவோர் வாரத்தையொட்டி இச்சாதனை நிகழ்த்தப்படடுள்ளதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்தள்ளனர்.

பல்வேறு கல்லூரிகளைச்  சேர்ந்த மாணவர்கள் ஒன்றுகூடி  இச்சாதனையை நிகழ்த்தியுள்ளனர். 1207 மாணவர்கள் வெற்றிகரமாக தமது சாதனையை நிலைநாட்டியுள்ளனர் என ஊடகவியல் கல்லூரி திணைக்களத்தின் தலைவர் டொக்டர் ராஜு சி ஜோன் தெரிவித்துள்ளார்.

இந்த பின்னோக்கி நடத்தலை வெற்றிகரமாக நிறைவு செய்து சாதனை படைத்துள்ளோம் என்றும் இதற்கான வெகுமதியாக கின்னஸ் சான்றிதழை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X