பிரிட்டனில் நூற்றுக்கணக்கான பாலர் பாடசாலை மாணவர்கள் இணைந்து ஒரே நேரத்தில் பாடலொன்றை பாடி புதிய சாதனை..... "> Tamilmirror Online || நூற்றுக்கணக்கான பாலர் பாடசாலை மாணவர்களின் சாதனை முயற்சி

2019 ஒக்டோபர் 16, புதன்கிழமை

நூற்றுக்கணக்கான பாலர் பாடசாலை மாணவர்களின் சாதனை முயற்சி

Kogilavani   / 2013 பெப்ரவரி 07 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரிட்டனில் நூற்றுக்கணக்கான பாலர் பாடசாலை மாணவர்கள் இணைந்து ஒரே நேரத்தில் பாடலொன்றை பாடி புதிய சாதனை நிலைநாட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பிரிட்டனின் மேற்கு பகுதி சபோக்கில் உள்ள நூற்றுக்கணக்கான பாலர் பாடசாலைகளை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு ஒரே நேரத்தில் ஒரே பாடலை பாடி புதிய சாதனை முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

செவிபுலனற்றவர்களுக்கு உதவுவதற்கான பணத்தை திரட்டுவதற்காக இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின்போது ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பாலர் பாடசாலை மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதன்போது ஒரே பாடலை அனைவரும் பாடியதுடன் பாடலுக்கேற்ற அங்க அசைவுகளையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

'இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்கான பல மாணவர்கள் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டிருந்ததை நாம் அறிந்திருந்தோம். கடந்த வருடம் நடைபெற்ற 'சைன் ஹெல்த்தஸ் சைன் 2 சிங் 2012'  நிகழ்வில் 114,277 மாணவர்கள் பங்குபற்றி சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது'  என  செவிபுலனற்ற மக்களுக்கான தேசிய அறக்கட்டளையின் தலைமை நிர்வாகி ஸ்டீவ் போவெல் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் இடம்பெற்ற நிகழ்வின் வீடியோ இணைப்பு


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .