2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’450 குடும்பங்களுக்கு உதவுவதற்கு முன்வரவும்’

Editorial   / 2020 மார்ச் 31 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவிலுள்ள அளிக்கம்பை கிராமத்தில் வாழும் 410 குடும்பங்கள்,  ஜீவனோபாயமின்றி பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் என்றுத் தெரிவிக்கப்படுகிறது.

அளிக்கம்பைக் கிராமத்தில் வாழும் பெரும்பாலான மக்கள் தினக்கூலிகள் என்றும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாடளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால், மேற்படி குடும்பங்கள் வாழ்வாதரமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.  

மேற்படி குடும்பங்கள், அன்றாட உணவை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில், பரிதாபகமரான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

அரசினாலோ,  சமூக சேவை நிறுவனங்களினாலோ வழங்கப்படுகின்ற நிவாரண உதவிகள், தமக்குச் சரிவர வந்துக் கிடைப்பதில்லை என்று, பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

410 குடும்பங்களில் 43 குடும்பங்கள் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் என்றும் அவர்கள், குடும்ப சுமை தாங்கமுடியாது மிக நலிவடைந்த நிலையிலுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

மேலும் இக்கிராமத்தில், பெற்றோரை இழந்த  60 சிறுவர்கள் பராமரிப்ப்பின்றியுள்ளதோடு, வலது குறைந்த  09 பேர் வாழ்ந்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விசேடமாக குழந்தைகளுக்கான பால்மா, அரிசி, சீனி, பருப்பு போன்ற அத்தியவசிய உணவுப் பொருள்கள் தேவைப்படுவதாக, அங்கு வாழும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அசாதாரண சூழ்நிலை காரணமாக, நாளாந்த கூலி வேலை செல்வதற்கு தாம் பல இன்னல்களை எதிர்கொண்டுள்ளதால், தங்களுக்கான அத்தியவசியப் பொருள்களை சமூக சேவை நிறுவனங்கள், அரசாங்கம் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து எதிர்பார்ப்பதாக அந்தக் குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .