2024 மே 08, புதன்கிழமை

55 பள்ளிவாயல்கள் அபிவிருத்தி; ரூ.30 மில். ஒதுக்கீடு

Editorial   / 2019 ஏப்ரல் 21 , பி.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ்

கம்பரெலிய வேலைத்திட்டத்தின் கீழ், அம்பாறை, பொத்துவில் தேர்தல் தொகுதியிலுள்ள சுமார் 55 பள்ளிவாசல்கள், அபிவிருத்திச் செய்யப்படவுள்ளன.

இதற்காக, உள்ளூராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸால், முதற்கட்டமாக சுமார் 30 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைவாக பொத்துவில் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 25 பள்ளிவாயல்களுக்கு 15.5 மில்லியன் ரூபாய் நிதியும் அக்கரைப்பற்று பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 6 பள்ளிவாயல்களுக்கு 3.5 மில்லியன் ரூபாய் நிதியும், அட்டாளைச்சேனையில் உள்ள ஆறு பள்ளிவாயல்களுக்கு, மூன்று மில்லியன் ரூபாய் நிதியும், பாலமுனைப் பிரதேசத்திலுள்ள ஐந்து பள்ளிவாயல்களுக்கு 3.5 மில்லியன் ரூபாய் நிதியும், ஒலுவில் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட ஒன்பது பள்ளிவாயல்களுக்கு 4.5 மில்லியன் ரூபாய் நிதியும், நிந்தவூர் பிரதேசத்தின் நான்கு பள்ளிவாயல்களுக்கு இரண்டு மில்லியன் ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டள்ளது.

இந்நிலையில், நிதி ஒதுக்கீட்டுக் கடிதங்களை, பள்ளிவாயல்களின் நம்பிக்கையாளர் சபையிடம் கையளிக்கும் நிகழ்வு, அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உள்ளூராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X