2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

அம்பாறை மாவட்ட சிறுபோக நெற்செய்கை 75% குறைப்பு

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2019 ஏப்ரல் 04 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கை 75 சதவீதமாகக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் தெரிவித்தார்.

இதற்கமைய, விவசாய அமைப்புகள், தங்களின் பிரிவுகளில் நெற்செய்கை பண்ண முடியாத பிரதேசங்களை இனங்கண்டு, அதற்கான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சிறுபோக நெற்செய்கை விசேட ஆரம்ப விவசாயக் குழுக் கூட்டம், மாவட்ட செயலகத்தில், இன்று (04) நடைபெற்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக, அம்பாறை- டீ.எஸ். சேனநாயக்கா சமுத்திரத்தில் நீர் மட்டம் குறைந்துள்ளமையால்  ஏற்கெனவே, சிறுபோக நெற்செய்கைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள பிரதேசங்களிலும் வேளாண்மைச் செய்கையை குறைப்பதற்கு, ​நேற்றைய விவசாயக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கைக்கு, ஏற்கெனவே சுமார் 75 ஆயிரம் ஹெக்டெயர்க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், முழுமையாக நெற்செய்கை மேற்கொள்வதற்கு 04 இலட்சத்து 60 ஆயிரம் அடி நீர் தேவையெனவும், கூறினார்.

இதேவேளை, ஏற்கனவே அனுமதி பெறப்பட்டதன் பிரகாரம், விதைப்புப் பணிகளை முன்னெடுத்துள்ள விவசாயிகள், வேளாண்மைச் செய்கை குறைக்கப்படும் பட்சத்தில், தாம் பெரும் நட்டத்தை எதிர்கொள்ளவுள்ளதாக, விசனம் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .