2024 மே 09, வியாழக்கிழமை

‘இல்மனைற் என்ற போர்வையில் வளங்கள் கொள்ளையடிப்பு’

எஸ்.கார்த்திகேசு   / 2017 நவம்பர் 21 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருக்கோவில் கரையோர பிரதேசம் தொடர்ச்சியான கடலரிப்பால் பாரிய அழிவுகளை எதிர்கொண்டு வரும் நிலையில், “இல்மனைற்” என்ற போர்வையில் வெளிநாட்டு நிறுவனங்கள், அதன் வளங்களைக் கொள்ளையடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக, அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் குற்றஞ்சாட்டினார்.

 

அந்நிறுவனங்களுடன், நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் சிலர், ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளனரெனவும் அவர் தெரிவித்தார்.

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“திருக்கோவில் பிரதேசம் கனிய வளங்கள் நிறையப் பெற்ற ஒரு பிரதேசமாகும்.இங்குள்ள வளங்களை அகழ்கின்றபோது, இப்பிரதேச மக்களின் வாழ்வாதாரத் தொழிலாக இருக்கின்ற மீன்வளம், கண்டல் தாவரங்கள், தென்னை மரங்கள், சுற்றாடல் போன்றவற்றுக்குப் பாதிப்புகள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன.

“இதனைத் தடுத்து நிறுத்தி, எமது பிரதேசத்தின் வளங்களைப் பாதுகாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் இங்கு வாழுகின்ற மக்களுக்கு உண்டு. இதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்பை வெளியிட வேண்டும். அப்போதுதான்  பிரதேசத்துக்கான பாதிப்புகளைத் தடுக்க முடியும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X