2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

உடங்கா ஆற்றுக்கு குறுக்காக புதிய பாலம்

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2017 ஜூலை 30 , பி.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள உடங்கா ஆற்றுக்குக் குறுக்காகவுள்ள முஸ்தாக் அலி இறக்கத்துக்கான பாலத்தை, சுமார் 30 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரின் முயற்சியால், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி  அமைச்சால் முன்னெடுக்கப்பட்டுவரும் கிராமியப் பாலங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ், இது மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கமைய, குறித்த வேலையை துரிதமாக ஆரம்பிக்கும் பொருட்டு, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிகச் செயலாளர் எம்.எம்.நயிமுத்தீன், இன்று (30) காலை, கள விஜயம் மேற்கொண்டார்.

இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் நிதியுதவியில், நாடளாவிய ரீதியில், முதற்கட்டமாக 1,210 கிராமியப் பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

இதன் மிகுதிப் பணத்தின் மூலம் 2ஆம் கட்டத்தில், மேலும் 63 கிராமியப் பாலங்களை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், கிழக்கு மாகாண சபையினூடாக விடுத்த வேண்டுகோளுக்கமைய, உடங்கா ஆற்றுக்குக் குறுக்காகவுள்ள முஸ்தாக் அலி இறக்கத்துக்கான பாலத்தை நிர்மாணிப்பதற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாலத்தை நிர்மாணிப்பதன் ஊடாக, 5 விவசாய கண்டங்களிலுள்ள சுமார் 1,500 ஏக்கர்களில் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் நன்மையடையவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .