2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஒழுக்காற்றுக்கு கண்டனம்

பைஷல் இஸ்மாயில்   / 2018 மார்ச் 15 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமுதாயத்துக்காக நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் குரல்கொடுத்துப் போராடிய பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் செயற்பாட்டை, முஸ்லிம் மக்கள் வாழ்த்துகின்ற சந்தர்ப்பத்தில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியால் அவருக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதென்பது, மிகவும் கண்டிக்கத்தக்க செயற்பாடாகுமென, மு.காவின் பாலமுனை மத்திய குழுவின் பொருளாளர் எஸ்.ரீ.எம்.ஹூதைப் தெரிவித்தார்.

பாலமுனை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பிரதிநிதிகளாக எத்தனையோ பேர், நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றனர். எனினும், பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், மிகத் தைரியமாக எமது சமூகத்துக்கு எதிராக நடக்கின்ற மிலெச்சத்தனமான செயற்பாடுகளைக் கண்டித்தும் அவ்வாறானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென, நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளார்.

“அவருக்கு எதிராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டு என்று ஒரு தீர்மானத்தை, கட்சியின் செயலாளர் நிஸாம் காரியப்பரால் கொண்டு சென்றிருப்பதை எமது சமூகமும் நாங்களும் ஒருபோது ஏற்றுக்கொள்ள முடியாது.

“கட்சியின் செயலாளரின் இந்த அநாகரிகமாக செயற்பாட்டை நாங்கள் மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம். அதை நினைத்து வெட்கப்படுகின்றோம். வேதனைப்படுகின்றோம்.

“இந்த ஒழுக்காற்று நடவடிக்கையின் செயற்பாட்டால் கட்சிக்குள் இருக்கின்ற ஒட்டு மொத்த அரசியல் பிரதிநிதிகளையும் அடிமைகளாகவும், ஊமைகளாகவும் ஆக்குகின்ற செயலாகவே மக்களால் பார்க்கப்படுகின்றது.

“கட்சிச் செயலாளரின் இந்த நடவடிக்கை தொடர்பாக எதிர்வரும் 20ஆம் திகதி முஸ்லிம் காங்கிரஸின் பாலமுனை மத்திய குழுக் கூட்டத்தில் விசேட கண்டன உரையாற்றி, அது தொடர்பில் முக்கியமான தீர்மானமொன்றை நிறைவேற்றவுள்ளோம். அந்தத் தீர்மானத்தை, கட்சியின் தலைவருக்குச் சமர்ப்பிக்கவுள்ளோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .